கவிதையின் காதலன் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்... படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க

டிவிட்டரில்

தோழியே உன் பிரிவு..

பேருந்து நெரிசலின் நடுவே
என் சட்டையில்
ஒட்டிக்கொண்ட
பட்டாம்பூச்சி நீ

காலம் என்ற நூலகத்தில்
நட்பு என்னும் வினாவிற்கு
விடை தேடும் முன்
இன்று என்னை கலங்கவிட்டு
பறந்து செல்கிறது பட்டாம்பூச்சி

தோழி என்று
தோழில் சாய்ந்து
தெரிந்த மொழியிலே
புரியாமல் கதை பேசுவாய்

நெடுந்தூரம் செல்கிறேன்
இனிமேல் வரமாட்டேன்
எனவும் கூறி
போய்விட்டு வருகிறேன் என்கிறாய்

இப்படி ஒருநாள் வரும் என நான் நினைத்ததில்லை
இந்த கண்ணிலும் கண்ணீர் வரும் என எதிர்பார்க்கவும் இல்லை

கொடுக்கவும் ஏதுமில்லை
பெற்றுக்கொள்ளவும் ஏதுமில்லை
கண்ணீர் துளிகள் மட்டும் மிச்சமிருக்கிறது..

கவிதை தொகுப்பின் சில துளிகள் உங்கள் பார்வைக்காக..

நண்பர்களே
எனது முதல் கவிதை தொகுப்பு "கவிதையின் காதலன்" விரைவில் வெளிவரவிருக்கின்றது.
கவிதை தொகுப்பிலிருந்து சில கவிதை துளிகள் உங்கள் பார்வைக்காக..
உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்க படுகின்றது..
படிச்சுட்டு உங்க கமென்ட்ஸ சொல்லுங்க..

1)ஓராயிரம் வருடங்கள்
தவமிருந்து
உன்னை காதலிக்கும்
வரத்தை பெற்றவன் நான்


2)அவள் சென்ற பாதையில்
பார்த்து செல்லுங்கள்
கீழே கிடக்கலாம்
ஏதாவது ஒரு அப்பாவி இளைஞனின் இதயம்


3)காதலன்
கவிஞன்
கிறுக்கன்
எல்லா புகழும் அவளுக்கே


4)அவள் இதயம் என்னும்
இருட்டறையில்
படிக்காமலே தொலைந்துபோன
புத்தகம்தான்
என் காதல்

5)என் முகம் வாடினால்
அவள் கண்கள் கலங்கும்
அவள் கண்கலங்க கூடாது
என்ற கவலையிலே
என் முகம் வாடிக் கிடக்கும்..


மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க எனக்கு உதவியா இருக்கும்