கவிதையின் காதலன் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்... படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க

டிவிட்டரில்

தபு சங்கர் கவிதைகள்.. 2

ஒரு தாய் தன்
குழந்தைக்குச்
சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது
மாதிரி காதல் எனக்கு
உன்னைக் காட்டியது
**********************************************

ஒரு
வண்ணத்துப்பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது
"ஏன் இந்தப் பூ
நகர்ந்துக்கொண்டே
இருக்கிறது?" என்று!

**********************************************

கண்ணாடித்
தொட்டியில் நான்
வளர்க்கும் மீன்கள்
உன் மீது புகார்
வாசிக்கின்றன 'அந்த ரெண்டு மீன்களுக்கு
மட்டும் ஏன்
அவ்வளவு அழகான
தொட்டி?' என்று.

**********************************************

நீயோ சூரிய
வெளிச்சம் முகத்தில்
படாமலிருக்க
புத்தகத்தால் உன்
முகத்தை மறைத்துக்
கொள்கிறாய்.
சூரியனோ
உன்னைப் பார்க்க
முடியாத கோபத்தில்
எல்லோரையும்
சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.

**********************************************

பயணம் முடிந்ததும் நீ
வீசிவிட்டுப்போன
பயணச்சீட்டு
வீதியில் கிடந்து
புலம்பிக்
கொண்டிருக்கிறது
பயணம்
முடிந்துவிட்டதை
நினைத்து.

**********************************************

நீ யாருக்கோ செய்த
மௌன
அஞ்சலியைப்
பார்த்ததும் எனக்கும்
செத்துவிட
தோன்றியது.

**********************************************

அன்று நீ குடை
விரித்ததற்காகக்
கோபித்துக் கொண்டு நின்றுவிட்ட
மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று சற்றெண்டு
மழை நின்றால் நீ
எங்கோ குடை
விரிப்பதாகவே
நினைத்துக்கொள்கிறேன்

**********************************************

புவியின் ஈர்ப்பு
விசையில்
எப்போதாவது தவறி
விழுந்திருக்கிறேன்
உனது விழியின்
ஈர்ப்பு விசையில்
எப்போதும் தவறாமல் விழுந்துக்கொண்டிருக் கிறேன்.

**********************************************

உன்னை ஏன்
இப்படிக் காதலித்துக்
கொண்டிருக்கிறேன்
அடிக்கிற அம்மாவின் கால்களையே
கட்டிக்கொண்டு
அழுகிற குழந்தை மாதிரி

**********************************************

சிறுமியைப்போல்
கடல் அலையில் கால்
நனைத்து
விளையாடிக்கொண்டிருந்தாய்
கடலோ
கொந்தளித்துக்கொண்டிருந்தது

**********************************************

4 கருத்துகள்:

  1. enna arumayaga ullathu ungalathu padaipugal innum athigamai ezhuthungal ungaluku ennathu anbana vazhthukal................

    பதிலளிநீக்கு
  2. அருமையான கற்பனை வளமும் தமிழ் மொழியில் உவமை உவமானம் உவமேயம் என அற்புதமாக கையாண்ட தமிழ் கவிதைகளை பாராட்ட கோடி வார்த்தைகள் வேண்டும்.மேன்மேலும் வரை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு