கவிதையின் காதலன் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்... படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க

டிவிட்டரில்

ஏ தேவதையே..


இறைவனிடம் நீ கேட்ட வரம்
இதுவாகவே இருக்க வேண்டும்
என்னை பார்த்தவனை எல்லாம்
கவிஞனாக்கி விடு என்பதே..

புன்னகை..

உதிர்வதென்பது
எப்போதும் சோகமானதுதான்
என்கிற என் நினைப்பை
உன் உதட்டில் இருந்து உதிர்கிற
ஒரு சின்னப் புன்னகை
பொய்யாக்கிவிடுகிறதே..

வண்ணத்துப்பூச்சி..

உதட்டில்
உரசிச் சென்றது
வண்ணத்துப்பூச்சி
ஞாபகம் வருகிறது
உன் இதழ்
உரசியதாய்..

தோழியின் பிரிவு

தோழியே என்னை நீயே கொல்லடி? பிரிய முடிவெடுத்தாய் புரிதலுக்கு இன்னும் பிரிய நினைக்க கூட மறுக்கிறது என் மனம் உனது நட்பை வெறும் புரிதலுக்கு மட்டும்தானா இந்த பிரிவு சொல் நிரந்திர பிரிவுக்கு இது வழிகோல் என்றால் தோழியே என்னை நீயே கொல்

காதல் கவிதை..

எல்லாக் காதல் கவிதைகளிலும் யாரோ ஒருத்தியின் வாசம் படிந்துதான் கிடக்கிறது..

சிலசமயம் அவள் அறிந்து பலசமயம் அறியாமல்..

செல்போனும் காதலியும்

(படித்ததில் ரசித்தது)

செல்போனும்
காதலியும்
இரட்டைப் பிறவிகள்
போல..!
எப்போதும் நம்
அரவணைப்பிலேயே
இருக்க
விரும்புவார்கள்..!
அவர்களை கவனிக்கா விட்
முதலில்
சிணுங்குவார்கள்..!
சிணுங்கிய பிறகும்
வாரி எடுத்து
அணைக்கா விட்டால்
அலறித் துடிப்பார்கள்..!
அதையும்
கண்டு கொள்ளாமல்
விட்டு விட்டால்
கோபித்து ஊமையாவார்க
நாமாய்
பார்த்து அவர்களிடம்
பேசும் வரை
ஊமையாய்த்தான்
இருப்பார்கள்..!