கவிதையின் காதலன் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்... படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க

டிவிட்டரில்

தோழியே உன் பிரிவு..

பேருந்து நெரிசலின் நடுவே
என் சட்டையில்
ஒட்டிக்கொண்ட
பட்டாம்பூச்சி நீ

காலம் என்ற நூலகத்தில்
நட்பு என்னும் வினாவிற்கு
விடை தேடும் முன்
இன்று என்னை கலங்கவிட்டு
பறந்து செல்கிறது பட்டாம்பூச்சி

தோழி என்று
தோழில் சாய்ந்து
தெரிந்த மொழியிலே
புரியாமல் கதை பேசுவாய்

நெடுந்தூரம் செல்கிறேன்
இனிமேல் வரமாட்டேன்
எனவும் கூறி
போய்விட்டு வருகிறேன் என்கிறாய்

இப்படி ஒருநாள் வரும் என நான் நினைத்ததில்லை
இந்த கண்ணிலும் கண்ணீர் வரும் என எதிர்பார்க்கவும் இல்லை

கொடுக்கவும் ஏதுமில்லை
பெற்றுக்கொள்ளவும் ஏதுமில்லை
கண்ணீர் துளிகள் மட்டும் மிச்சமிருக்கிறது..